Categories
டென்னிஸ் விளையாட்டு

“என்னுடைய சகோதரி மட்டுமே காரணம்” அவள் இல்லை என்றால் நான் இல்லை…. கண்ணீருடன் செரினா உருக்கம்….!!!!

அமெரிக்க ஓபன் டென்னிஸ் போட்டி நியூயார்க் நகரில் நடைபெற்று வருகிறது. இந்த போட்டியின் 3-வது சுற்றில் ஆஸ்திரேலியா வீராங்கனை அஜ்லா உடன் மோதிய செரினா வில்லியம் அதிர்ச்சி தோல்வியடைந்து போட்டியை விட்டு வெளியேறினார். இந்த போட்டிக்கு பிறகு செரினா வில்லியம்ஸ் தான் டென்னிசிலிருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தார். இவர் ஓய்வு பெறுவதாக அறிவித்தவுடன் மைதானத்தில் இருந்த அனைவரும் எழுந்து நின்றனர். கடந்த 1995-ஆம் ஆண்டு தன்னுடைய 14 வயதில் டென்னிஸ் உலகில் கால் பதித்த செரினா வில்லியம்ஸ் 4 தங்கப்பதக்கங்கள், 73 ஒற்றையர் பதக்கங்கள், 23 கிராண்ட்ஸ்லாம் பெற்று 41 வயதில் ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார்.

இவருக்கு பலரும் வாழ்த்து தெரிவித்து வரும் நிலையில், செரினா தனி சிறப்புடையவர் என அவருடைய ரசிகர்கள் பாராட்டி வருகின்றனர். இந்நிலையில் கண்ணீருடன் மைதானத்தில் இருந்து விடைபெற்ற செரினா வில்லியம்ஸ் என்னுடைய சகோதரி வீனஸ் மட்டும் இல்லையெனில் இன்று நான் இங்கு இல்லை என்றார். அதன் பின் என்னுடைய சகோதரி வீனஸ் மட்டுமே நான் இங்கு செரீனாவாக நிற்பதற்கு முழு காரணம். இந்த தருணத்தில் என்னுடைய நன்றியை அவருக்கு தெரிவித்துக் கொள்கிறேன் என்றார். மேலும் இப்போது என் கண்களில் ஆனந்த கண்ணீர் மட்டுமே இருக்கிறது என்றார்.

Categories

Tech |