Categories
கள்ளக்குறிச்சி மாவட்ட செய்திகள்

“என்னுடைய பணத்தை வாங்கி கொடுங்க சார்” விவசாயிக்கு நேர்ந்த விபரீதம்…. போலீஸ் விசாரணை…!!

காவல் நிலையத்தில் புகார் அளித்த விவசாயிக்கு கொலை மிரட்டல் வந்துள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கள்ளக்குறிச்சி மாவட்டத்திலுள்ள சங்கராபுரம் அருகே சோழப்பட்டு கிராமத்தில் சரவணன் என்பவர் வசித்து வருகிறார். இவர் விவசாயம் செய்து வந்துள்ளார். இந்நிலையில் சரவணன் கடந்த 2013-ஆம் ஆண்டு கோவிந்தராஜ் என்பவருக்கு தன்னுடைய விவசாய நிலத்தை விற்பனை செய்துள்ளார். இதில் ரூபாய் 1 லட்சம் பாக்கி பணம் சரவணனுக்கு, கோவிந்தராஜ் கொடுக்க வேண்டியிருந்தது. இந்த பாக்கி பணத்தை சரவணன் பலமுறை கேட்டுள்ளார். ஆனால் கோவிந்தராஜ் பணத்தை கொடுக்காமல் காலதாமதம் செய்து வந்துள்ளார்.

இதுகுறித்து சரவணன் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த கோவிந்தராஜ் தனது கூட்டாளிகளான ஏழுமலை, இளங்கோவன் ஆகியோருடன் சேர்ந்து சரவணனை ஆபாச வார்த்தைகளால் திட்டி, பலமாகத் தாக்கி, கொலை மிரட்டல் விடுத்துள்ளனர். இதுகுறித்து சரவணன் காவல்துறையினரிடம் கூறியுள்ளார். அதன்பிறகு காவல் துறையினர் கோவிந்தராஜ், ஏழுமலை, இளங்கோவன் உள்ளிட்ட 3 பேர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகிறது.

Categories

Tech |