அமெரிக்க சபாநாயகர் நான்சி பெலோசிக்கு எதிராக சீனாவின் வெளியுறவு அமைச்சகம் பல்வேறு தடைகளை விதித்திருப்பதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது. சீனாவின் கடுமையான மிரட்டலுக்கு மத்தியில் கடந்த 2ம் தேதி இரவு தைவான் தலைநகர் கைபேவுக்கு சென்ற நான்சி அந்த நாட்டின் அதிபர் சாய் இங் வென்னை சந்தித்து அமெரிக்காவின் உறுதியான ஆதரவை தெரிவித்துள்ளார். இது சீனாவிற்கு அமெரிக்கா மீது கடுமையான ஆத்திரத்தை ஏற்படுத்தியிருக்கிறது. இந்த சூழலில் தைவானை சுற்றிலும் சீனா முற்றுகையிட்டு தைவான் நாட்டின் வடகிழக்கு மற்றும் தென்மேற்கு கடற்கரை ஒட்டிய பகுதிகளில் சீன அதிநவீன டாங்பெங் ஏவுகணை வீசி சோதனை மேற்கொண்டு வருகிறது.
இதற்கிடையே ஜப்பான் சென்ற நான்சி சீன ரானுவ நடவடிக்கை பற்றி ஜப்பானில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் பேசியபோது, தைவானில் அமைதி நிலவ வேண்டும் என்பதை அவர்களுடைய உறவு முறையை உருவாக்கியுள்ளது. சீன அரசு அமெரிக்க பிரதிநிதியான என்னுடைய தைவான் பயணத்தை ஒரு சாக்காக பயன்படுத்தி அந்த நாட்டின் மீது ஏவுகணை தாக்குதல் நடத்தி இருக்கிறது. மேலும் தைவான் உலகின் சுதந்திரமான நாடுகளில் ஒன்றாகும் மற்றும் செழிப்பான பொருளாதாரம் கொண்ட ஒரு சிறந்த ஜனநாயகம் தைவானை தனிமைப்படுத்த அமெரிக்கா ஒருபோதும் அனுமதிக்காது என தெரிவித்துள்ளார். இதனை அடுத்து அவருக்கு பதிலடியாக சீனா அவர் மீது தடை விதி இருக்கின்றது.
இது தொடர்பாக சீனாவின் வெளியுற அமைச்சகம் பேசும்போது நான்சி சீனாவின் உள் விவகாரங்களில் தீவிரமாக தலையிட்டு சீனாவின் இறையாண்மை மற்றும் காந்திய ஒருமைப்பாட்டை கடுமையாக குறை மதிப்பிற்கு உட்படுத்தியுள்ளார். மேலும் நான்சி மற்றும் அவரது உடனடி குடும்பத்தினர் மீது பொருளாதார தடைகளை சீனா விதிக்கும் என தெரிய வந்திருக்கிறது. சீனா அரசுக்கு எதிராக செயல்பட்டதற்காக இதுவரை பல அமெரிக்க அதிகாரிகள் மீது சீனா கடந்த சில ஆண்டுகளாக பல்வேறு தடைகளை விதித்து கொண்டிருக்கிறது. அதன்படி இது போன்றே அமெரிக்க அதிகாரிகள் மீதான தடைகள் மூலம் அவர்கள் சீனாவிற்குள் நுழைவதற்கும் சீன நிறுவனங்களுடன் வணிகம் செய்வதற்கும் தடை விதிக்கப்படும்.