தனது பிறந்த நாளன்று படப்பிடிப்பு உள்ளதால் ரசிகர்கள் எவரும் சென்னை போயஸ் கார்டன் இல்லத்திற்கு வர வேண்டாம் என ரஜினி தெரிவித்துள்ளார்.
நடிகர் ரஜினி அரசியல் கட்சி தொடங்குவது பற்றி அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ள நிலையில் அவருக்கு அனைத்து கட்சி தலைவர்கள் மற்றும் தொண்டர்கள் அனைவரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். மேலும் சிலர் ரஜினிக்கு எதிராக பல்வேறு கருத்துக்களைக் கூறி வருகிறார்கள். இந்நிலையில் ரஜினியின் அண்ணாத்த திரைப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்து கொண்டிருக்கிறது.
அதனால் படப்பிடிப்புக்காக தான் ஹைதராபாத் செல்வதாகவும், தன்னுடைய பிறந்த நாளன்று படப்பிடிப்பு உள்ளதால் சென்னை திரும்ப வாய்ப்பில்லை. அதனால் ரசிகர்கள் சென்னை போயஸ் கார்டன் இல்லத்திற்கு வர வேண்டாம் என்று நடிகர் ரஜினிகாந்த் வேண்டுகோள் விடுத்துள்ளார்.