Categories
தேசிய செய்திகள்

“என்னுடைய மகன் இறந்துட்டான்”…. இனி பாதுகாப்பான சுற்றுலா வேணும்…. போராடி வரும் தந்தை….!!!!

இமாச்சல பிரதேசத்தில் தனது 12 வயது மகன் 2021 ஆம் ஆண்டு பிரில் பாராகிளைடிங்கில் பங்கேற்றபோது உயிரிழந்தததை சுட்டிக்காடி பெங்களூரைச் சேர்ந்த அவனது தந்தை ரிஷப் திரிபாதி பாதுகாப்பான சுற்றுலா வேண்டுமென்று அரசுக்கு மனு அளித்துள்ளார். பாராகிளைடிங், படகு பயணம் ஆகிய சாகச விளையாட்டுகளை நடத்தும் நிறுவனங்களின் பாதுகாப்பு வசதிகளை மேம்படுத்துதல் மற்றும் அந்த நிறுவனங்களுக்கு கடுமையான வழிகாட்டுதல்களை விதித்தல் போன்றவற்றை உறுதிப்படுத்துமாறு அவர் மத்திய, மாநில அரசாங்கத்திடம் தொடர்ந்து கோரிக்கை வைத்து வருகிறார். அதுமட்டுமல்லாமல் இது போன்று விளையாட்டுகள் நடத்தப்படும் பகுதிகளில் ஆம்புலன்ஸ் மற்றும் முதலுதவி வசதிகள் உடனே கிடைக்க வேண்டும் என்றும் அவர் கோரிக்கை வைத்து வருகிறார்.

Categories

Tech |