இந்திய அணியில் சிறப்பான ஆல்ரவுண்டர்களில் ஒருவராக ரவீந்திர ஜடேஜா இருக்கிறார். ஆசிய உலகக் கோப்பையில் பாகிஸ்தானுக்கு எதிராக இந்தியா மோதியதில் ஜடேஜா சிறப்பாக ஆடி 35 ரன்கள் எடுத்தார். இன்று ஹாங்காங் உடன் இந்திய அணி மோதுகிறது. இந்த போட்டியை முன்னிட்டு ஜடேஜா நேற்று செய்தியாளர்களை சந்தித்து பேசினார்.
அப்போது செய்தியாளர்கள் ஜடேஜாவிடம் காயம் காரணமாக 20 ஓவர் உலகக் கோப்பை அணியை இழக்கக்கூடும் என்ற வதந்திகள் பரவியது தொடர்பாக கேட்டனர். அதற்கு ஜடேஜா உலகக்கோப்பை அணியில் நான் இல்லை என்று பரவியது மிகச் சிறிய வதந்தி தான். ஒருமுறை என்னுடைய மரணம் குறித்தே வதந்தி பரவியது. இந்த மாதிரி வதந்திகளை பற்றி எல்லாம் நான் யோசிப்பதே கிடையாது. என்னுடைய முழு கவனமும் மைதானத்தில் சிறப்பாக செயல்படுவதில் மட்டும்தான் இருக்கிறது என்றார்.