Categories
சினிமா தமிழ் சினிமா

“என்னுடைய மிகப்பெரிய ஆசை நடந்து விட்டது” கனவு நிறைவேறியதால் மகிழ்ச்சியில் ராஷ்மிகா….!!!

பிரபல நடிகை தன்னுடைய கனவு நிறைவேறி விட்டதாக கூறியுள்ளார்.

தென்னிந்திய சினிமாவில் பிரபல நடிகையாக வலம் வரும் ரஷ்மிகா மந்தனா தன்னுடைய க்யூட்டான பாவனைகள் மூலம் ஏராளமான ரசிகர்களை தன்வசப்படுத்தியுள்ளார். இவர் நடித்த கீதா கோவிந்தம் என்ற திரைப்படத்தின் மூலமாக மிகவும் பிரபலமானார்.

அதன் பிறகு ராஷ்மிகா மந்தனா நடித்த புஷ்பா திரைப்படம் சூப்பர் ஹிட்டான நிலையில், ஸ்ரீவள்ளி கதாபாத்திரம் மிகவும் பிரபலமாக பேசப்பட்டது. இவர் தற்போது நடிகர் விஜய்யுடன் சேர்ந்து வாரிசு திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்நிலையில் நடிகை ராஷ்மிகா மந்தனா தன்னுடைய கனவு நிறைவேறி விட்டதாக ஒரு பேட்டியில் கூறியுள்ளார்.

அதாவது பொதுவாக சினிமா துறையில் வரும் நடிகர், நடிகைகள் எல்லோரும் தன்னுடைய படங்கள் வெற்றி பெற வேண்டும் என்று தான் நினைப்பார்கள். ஆனால் நான் இந்திய அளவில் எல்லா மொழிகளிலும் நடித்து பிரபலமாக வேண்டும் என விரும்பினேன். நான் நினைத்தது போன்று தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், ஹிந்தி உள்ளிட்ட மொழிகளில் நடித்து வருகிறேன். என்னுடைய மிகப்பெரிய ஆசை தளபதி விஜய்யுடன் சேர்ந்து நடிக்க வேண்டும் என்பதுதான்.

அந்த ஆசை தற்போது நிறைவேறிவிட்ட நிலையில், அமிதாப்பச்சனுடன் சேர்ந்து பிறந்தநாள் கொண்டாடியது மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது. இதைவிட வேறு எனக்கு என்ன வேண்டும் சொல்லுங்கள் என கூறியுள்ளார்.

Categories

Tech |