தமிழ் சினிமாவில் பிரபலமான நடிகையான வனிதா விஜயகுமார் பிக்பாஸ் சீசன் 3 என்ற நிகழ்ச்சியில் பங்கேற்ற பின், சின்னத்திரையில் வாய்ப்புகள் குவிய ஆரம்பித்தன. இதையடுத்து சினிமாவிலும் தொடர்ச்சியாக வாய்ப்புகள் வந்த வண்ணம் இருந்தன. இந்நிலையில் வனிதா தனது மகன் பிறந்தநாளிற்கு வாழ்த்து தெரிவித்து பகிர்ந்துள்ள பதிவு ஒன்று இணையத்தில் தற்போது வைரலாக பரவி வருகிறது.
மேலும் சினிமாவில் நடித்து வரும் வனிதா யூடியூப் சேனல் ஒன்றையும் நடத்தி வருகிறார். இந்நிலையில் வனிதாவிற்கு ஏற்கெனவே 2-முறை திருமணம் செய்து, பின் அந்த இரண்டு திருமணமுமே விவாகரத்தில் முடிந்துள்ளது. அதன்பிற கு பீட்டர் பவுல் என்பவரையும் திருமணம் செய்து கொண்டார். பின் அவரையும் விட்டு பிரிந்த வனிதா, தனது மகள்களுடன் தனியாக வாழ்ந்து வருகிறார்.
ஆனால் இவரது மகன் ஸ்ரீஹரி தன் தாத்தா விஜயகுமார் உடன் வசித்து வருகிறார். இந்நிலையில் நேற்று வனிதாவின் மகன் ஸ்ரீஹரி தனது 21-வது பிறந்தநாளை கொண்டாடியுள்ளார். இதையடுத்து,அவரது மகனுக்கு வாழ்த்து தெரிவித்த வனிதா ‘என்னுடைய முதல் காதல் என்றும் நீதான், எனவும் உன் அன்பு எப்போதும் அளவற்று இருக்க வேண்டும். மேலும் தாய் தன் பிள்ளை மீது வைத்திருக்கும் அன்புதான் தூய்மையானது.
இந்நிலையில் ஒரு அம்மாவாக இது என் 21-வது பிறந்தநாள். மேலும் என் முதல் மகன் ஸ்ரீஹரி பிறந்து 21-வயதை கடந்துள்ளான். ஆகவே என் அழகான திறமையான மகனுக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள். நீ எப்போதும் என் லட்டு தான் என்றும் ,உன் கனவுகள் அனைத்தும் நிறைவேற கடவுள் உன்னை ஆசீர்வதிக்கட்டும். இவ்வாறு உருக்கமான வரிகளில் பதிவிட்டுள்ளார். அவரின் இந்த பதிவு இணையத்தில் வைரலாக பரவி வருகிறது.