செல்வராகவனின் மனைவி தனது மூன்றாவது குழந்தையுடன் போஸ் கொடுத்த அழகிய புகைப்படம் வெளியாகியுள்ளது.
தமிழ் திரையுலகில் பிரபல இயக்குனர் செல்வராகவன் இயக்கத்தில் சமீபத்தில் வெளியான ‘நெஞ்சம் மறப்பதில்லை’ திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது . இதை தொடர்ந்து செல்வராகவன் நானே வருவேன், ஆயிரத்தில் ஒருவன் 2 ஆகிய படங்களை இயக்க உள்ளார். சமீபத்தில் இயக்குனர் செல்வராகவன் – கீதாஞ்சலி தம்பதிக்கு ஆண் குழந்தை ஒன்று பிறந்தது. ஏற்கனவே இவர்களுக்கு இரண்டு குழந்தைகள் இருக்கின்றனர்.
மேலும் மூன்றாவதாக பிறந்த ஆண் குழந்தைக்கு ரிஷிகேஷ் என்று பெயர் வைத்ததாக தெரிவித்தனர் . இந்நிலையில் செல்வராகவனின் மனைவி தனது குழந்தை ரிஷிகேஷுடன் போஸ் கொடுத்த அழகிய புகைப்படத்தை செல்வராகவன் தனது சமூக வலைதளப் பக்கத்தில் வெளியிட்டுள்ளார் . மேலும் அவர் அதில் ‘என்னுடைய ‘யாமினி’ கீதாஞ்சலி மற்றும் என்னுடைய லிட்டில் பிரின்ஸ் ரிஷிகேஷ்’ என்று பதிவிட்டுள்ளார். தற்போது இந்த புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.