ஐபிஎல் 15ஆவது சீசனின் 22ஆவது லீக் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிகள் மோதின. இதில் டாஸ் வென்ற ஆர்சிபி அணி முதலில் பந்துவீச்சைத் தேர்வு செய்தது. சென்னை அணி 63 ரன்கள் வித்தியாசத்தில் வென்று தனது முதல் வெற்றியை பதிவு செய்தது.
வெற்றிக்குப் பிறகு கேப்டன் ஜடேஜா பேசுகையில், கேப்டனாக பெறும் முதல் வெற்றி எப்போதுமே சிறப்பானது. தனது முதல் வெற்றியை எனது மனைவிக்கு அளிக்க விரும்புகிறேன் என தெரிவித்தார். நாங்கள் ஒரு குழுவாக இணைந்து மீண்டு வந்துள் ளோம். தொடர்ந்து சிறப்பாக விளையாட முயற்சிக்கிறேன் என்று கூறியுள்ளார்.