கல்கியின் புகழ்பெற்ற “பொன்னியின் செல்வன்” நாவலை அடிப்படையாக வைத்து இயக்குனர் மணிரத்னம் இயக்கத்தில் உருவாகி இருக்கும் படம் “பொன்னியின் செல்வன்-1”. 2 பாகங்களாக உருவாக உள்ள இந்த படத்தின் முதல் பாகம் வரும் செப்டம்பர் 30ம் தேதி நாளை திரைக்கு வரவுள்ள நிலையில், தொடர்ச்சியான அப்டேட்டுகளை கொடுத்த படக்குழு ரசிகர்களை கவர்ந்து வருகிறது.
இந்த நிலையில் நடிகர் விக்ரம் கூறியதாவது, இந்தியா முழுவதும் நிறைய வரலாற்று கதைகள் இருக்கிறது, இது போன்ற கதைகளில் நான் நடிக்க மாட்டேனா என்ற கனவுகளும் இருந்தது; எனக்கு பிடித்த ஆதித்த கரிகாலன் கதாபாத்திரம் அமைந்தது மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது. ஆதித்த கரிகாலனின் காதல் எனக்குள் நெருப்பாக எரிந்து கொண்டிருக்கிறது; அவனுடைய காதலுக்காக அவன் என்ன வேண்டுமானாலும் செய்வான். அதை உணர்ந்து தான் நான் நடித்தேன். பொன்னியின் செல்வனில் இது சிறந்த காதல் காவியமாக அமையும் என கூறினார்.