தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருக்கும் விக்ரமுக்கு உடல்நிலை பாதிக்கப்பட்டு கடந்த 8-ஆம் தேதி சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். சிகிச்சைக்கு பிறகு அவர், நேற்று வீடு திரும்பினார். இதற்கிடையே விக்ரம் உடல்நிலை குறித்து யூடியூப் உள்ளிட்ட பல்வேறு சமூக வலைத்தளங்களில் வதந்திகள் பரவி வந்தது.
இந்நிலையில் இன்று ‘கோப்ரா’ படத்தின் ஆடியோ வெளியீட்டு விழா சென்னையில் உள்ள பீனிக்ஸ் மாலில் நடைபெற்றது. இந்த விழாவில் பேசிய நடிகர் விக்ரம், நம்ம என்னென்னமோ பார்த்துட்டோம். இதெல்லாம் ஒன்றுமில்லை என்று தன்உடல்நிலை குறித்த வதந்திகளுக்கு பதிலடி கொடுத்தார்.