செய்தியாளர்களிடம் பேசிய டிடிவி தினகரன், ஒரு அரசாங்கம் வந்தாலே ஒரு ஆறு மாதம் அவர்களுக்கு காலம் கொடுக்க வேண்டும், அது முடிந்துவிட்டது, இதிலேயே அவர்கள் எப்படி நடந்து கொண்டார்கள் என்பது எல்லாருக்கும் தெரியும், முதலமைச்சர் என்ன சொன்னாரு தேர்தல் அறிக்கையில் நீட் தேர்வு வந்தவுடனே ஒரே கையெழுத்தில் நீட் தேர்வை ரத்து செய்து விடுவோம் என்றார். அதேபோன்று சிறுபான்மை மக்களின் காவலாக காட்டிக்கொண்டு…
7 பேர் விடுதலை எல்லாம் என்ன பேசினார்கள் என்று தெரியும் ? இப்போது என்ன நடந்திருக்கிறது என்பதும் தெரியும். அது போல அந்த ஆட்சி கொஞ்சம் கொஞ்சமாக திமுகவினுடைய சுயரூபம் வெளிப்பட்டு கொண்டிருக்கிறது. இந்த நேரத்தில் அதிமுக உடைய செயல்பாடு… அவங்க பிரச்சனையை அவர்களால் தீர்க்க முடியவில்லை, இவர்கள் வந்து திசை திருப்புவதற்காக பல்வேறு போராட்டங்களை அறிவித்து இருக்கிறார்கள் என விமர்சித்தார்.