தமிழ்நாடு சட்டப்பேரவையில் மானியக் கோரிக்கை மீதான விவாதத்தின் போது தன்னைப் புகழ்ந்து பேசக்கூடாது. அப்படிப் பேசினால் அந்த எம்.எல்.ஏ. மீது நடவடிக்கை எடுக்கப்படும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். கடலூர் எம்.எல்.ஏ ஐயப்பன் முதலமைச்சரை புகழ்ந்து பேசிய நிலையில், “கொடுக்கப்பட்ட நேரத்தை மனதில் வைத்து பேச வேண்டும். புகழ்ந்து பேசக்கூடாது என கட்டளை இட்டிருக்கிறேன். நடவடிக்கை எடுக்க வைத்துவிடாதீர்கள். நேற்றே இது தொடர்பாக எச்சரித்தேன் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தியுள்ளார்.
Categories