மனசே மௌனமா, கிழக்கே வரும் பாட்டு, முஸ்தபா உள்ளிட்ட தமிழ் படங்களில் நடித்தவர் நடிகை ஷர்மிளா. இவர் தமிழ் மட்டுமல்லாமல் மலையாளம், கன்னடம் படங்களிலும் நடித்துள்ளார். இவர் சினிமாவிற்கு நடிக்க வந்த சில வருடங்களிலேயே மலையாள நடிகர் கிஷோர் சத்யா என்பவரை திருமணம் செய்து கொண்டார். பின்னர் அவருக்கு பல பெண்களோடு தொடர்பு இருந்ததால் பிரிந்தார். இரண்டாவது திருமணம் செய்து அவரையும் பிரிந்தார். ஒரு மகன் உள்ளார். இந்நிலையில் நடிகை ஷர்மிளா பேசிய பேட்டி ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது. அதில் சினிமா வாழ்க்கையில் தான் சந்தித்த பாலியல் தொல்லைகள் குறித்து வெளிப்படையாக பேசி உள்ளார். அதில் மலையாள படம் ஒன்றில் நடித்த போது அந்த படத்தின் சூட்டிங் கோழிக்கோட்டில் நடைபெற்றது. இந்த படத்தின் தயாரிப்பாளர்கள் அனைவருமே இளம் வயதினர்.
படப்பிடிப்பு தொடங்கிய போது என்னை அக்கா என்று கூப்பிட்டார்கள். அடுத்த மூன்று நாட்களில் அவர்களின் உதவியாளர்களை அனுப்பி அட்ஜஸ்மெண்டுக்கு ரெடியா என்று கேட்டனர். இதற்காக ஐம்பதாயிரம் வரை பேரம் பேசினார்கள். அது மட்டும் இன்றி அவர்களிள் பிடித்த ஒருவரை தேர்வு செய்து அவர்களுடன் படுக்கையை பகிர்ந்து கொள்ள வேண்டும் என்று கூறினார்கள். என் மகனை விட கொஞ்சம் வயசு தான் உங்களுக்கு அதிகம். அதனால் என்னை அம்மா ஸ்தானத்தில் வைத்து பாருங்கள் என்று கூறினேன். ஆனாலும் அவர்கள் தொடர்ந்து வற்புறுத்ததியதால் படத்தில் இருந்து விலகினேன் என்று கூறியுள்ளார்.