Categories
அரசியல் மாநில செய்திகள்

“என்னை அடித்தால் நான் திருப்பி அடிப்பேன்”…. தன்மானமிக்க அரசியல்வாதி நான்…. அண்ணாமலை பேட்டி….!!!!

என்னை அடித்தால் நான் திருப்பி அடிப்பேன் என்று பாஜக தலைவர் அண்ணாமலை பேசியுள்ளார்.

சுதந்திரப் போராட்ட வீரர் புலிதேவரின் 37 ஆவது பிறந்தநாள் நேற்று கொண்டாடப்பட்டது. இதனால் சென்னை தியாகராய நகரில் உள்ள அவரது உருவப்படத்துக்கு தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்து அவர் கூறியதாவது “அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் என்னை பற்றி தரம் தாழ்ந்த வகையில் விமர்சனம் செய்வதற்கு நான் பதிலடி கொடுத்தேன். இதுபோன்ற மிரட்டல்களை கண்டு நான் பயப்பட மாட்டேன். தக்க பதிலடி கொடுப்பேன்.

அரசியல் இல்லாவிட்டால் ஆடு, மாடு மேய்த்துக்கொண்டு வயலில் இறங்கி என்னால் வேலை பார்க்க முடியும், வீட்டிற்கு வெளியே கயிற்று கட்டிலை போட்டு படுத்து உறங்க முடியும். என்னை அடித்தால் நான் திருப்பி அடிப்பேன். தன்மானமிக்க அரசியல்வாதி நான். யாருடைய கை, காலையும் பிடித்துக் கொண்டு இந்த பதவிக்கு வரவில்லை” என்று அவர் தெரிவித்துள்ளார்.

Categories

Tech |