பேட்டி ஒன்றில் நடிகை பூர்ணா நிர்வாணமாக நடிக்க சொன்னாதால் பட வாய்ப்பை இழந்தேன் என கூறியுள்ளார்.
தமிழ் சினிமாவில் பிரபல நடிகையாக வலம் வருபவர் பூர்ணா. இவர் பரத் நடிப்பில் வெளியான முனியாண்டி விலங்கியல் மூன்றாமாண்டு திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமா உலகிற்கு அறிமுகமானார். இவர் நடிப்பில் சமீபத்தில் ரிலீசான விசித்திரன் திரைப்படம் கலவையான விமர்சனங்களை பெற்று வருகின்றது. இவர் தற்பொழுது பிசாசு 2, அம்மாயி உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்து வருகின்றார்.
இந்நிலையில் அண்மையில் இவர் ஊடகம் ஒன்றிற்கு பேட்டியளித்த போது உங்களிடம் யாராவது நிர்வாணமாக நடிக்க சொல்லி கேட்டது உண்டா’ என கேள்வி எழுப்பிய பொழுது பூர்ணா கூறியுள்ளதாவது, பெரிய ஓடிடி தளத்திலிருந்து எனக்கு ஒரு நல்ல வாய்ப்பு கிடைத்தது. அந்த தொடரின் கதையும் எனக்கு பிடித்திருந்தது. ஆனால் அந்த தொடரில் ஒரு முக்கிய காட்சியில் நிர்வாணமாக நடிக்க இருந்ததால் நான் அந்த தொடரில் நடிக்க மறுத்து விட்டேன். அந்த வாய்ப்பை எனக்கு வேண்டாம் என மிகவும் வருத்தத்துடன் கூறினேன். காரணம் அந்த கதை எனக்கு மிகவும் பிடித்திருந்தது. மேலும் அந்த காட்சி அந்த தொடருக்கு மிகவும் முக்கியமானதும் கூட. ஆனால் அப்படி என்னால் நடிக்க முடியாது என்பதால் இயக்குனரிடம் மன்னித்து விடுங்கள் என கூறினேன்” என பேட்டியில் கூறியுள்ளார்.