மறைந்த தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாறு படமான தலைவி படத்தின் டிரைலர் வெளியாகியுள்ளது .
மறைந்த தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாறு படமான ‘தலைவி’ படத்தை இயக்குனர் ஏ.எல்.விஜய் இயக்கியுள்ளார். இந்த படத்தில் ஜெயலலிதா கதாபாத்திரத்தில் நடிகை கங்கனா ரணாவத்தும், எம்.ஜி.ஆர் கதாபாத்திரத்தில் நடிகர் அரவிந்த்சாமியும் நடித்துள்ளனர். மேலும் சமுத்திரகனி, மதுபாலா, பாக்யஸ்ரீ உள்ளிட்டோர் இந்த படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர் .
#ThalaiviTrailer @vishinduri @thearvindswami @ShaaileshRSingh @BrindaPrasad1 @neeta_lulla #HiteshThakkar #RajatArora @ZeeStudios_ #GothicEntertainment @Thalaivithefilm Official Trailer (Hindi) | Kangana Ranaut | Arvind Swamy | Vi… https://t.co/c5ZRyU5ZJp via @YouTube
— Kangana Ranaut (@KanganaTeam) March 23, 2021
இந்த படத்திற்கு இசையமைப்பாளர் ஜி.வி பிரகாஷ் இசையமைத்துள்ளார். தமிழ், இந்தி உள்ளிட்ட மொழிகளில் உருவாகியுள்ள இந்த படம் வருகிற ஏப்ரல் 23ஆம் தேதி வெளியாகவுள்ளது. இந்நிலையில் இன்று நடிகை கங்கனா ரனாவத்தின் பிறந்தநாளை முன்னிட்டு ‘தலைவி’ படத்தின் பரபரப்பான டிரைலரை படக்குழு வெளியிட்டுள்ளது. இந்த ட்ரெய்லரில் மறைந்த முதல்வர் ஜெயலலிதா வாழ்க்கையில் நடந்த பல நிகழ்வுகள் உள்ளது.