Categories
மாநில செய்திகள்

“என்னை இப்படி கூப்பிட்டால் தான் பிடிக்கும்”….. மனம் திறந்த உதயநிதி….!!!!!

திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் தன்னை இப்படி அழைத்தால் தான் எனக்கு பிடிக்கும் என்று தெரிவித்துள்ளார்.

கடந்த சட்டமன்ற தேர்தலில் முதல் முறையாக போட்டியிட உதயநிதி ஸ்டாலின் சேப்பாக்கம் தொகுதியில் களமிறங்கி வெற்றி பெற்றார். அவருக்கு அமைச்சர் பதவி கொடுக்கப்படும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் வாரிசு அரசியல் உள்ளிட்ட பல்வேறு சர்ச்சைகள் காரணமாக அவருக்கு பதவி வழங்கப்படவில்லை. இருப்பினும் வெற்றி பெற்ற முதல் நாளில் இருந்தே தனது தொகுதிக்குட்பட்ட பகுதிகளில் தொடர்ந்து என்று உதயநிதி ஸ்டாலின் தீவிரமாக பணியாற்றி வருகிறார்.

தேங்கிக் கிடக்கும் குப்பைகளை சம்பந்தப்பட்ட அதிகாரிகளுடன் பேசி அகற்றுவது, சாக்கடை நீர் தேங்காமல் தூய்மைப்படுத்துவது என விறுவிறுப்பாக வேலை பார்த்து வருகிறார். திமுக தலைவர் ஸ்டாலின் இருந்த அக்கட்சியின் இளைஞரணி செயலாளர் பதவி தற்போது உதயநிதி ஸ்டாலினுக்கு வழங்கப்பட்டது. இந்நிலையில் புதுக்கோட்டையில் நேற்று திமுக மூத்த உறுப்பினர்களுக்கு ‘பொற்கிழி’ வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. இந்நிகழ்ச்சியில் திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் கலந்து கொண்டார். அதில் 1,051 கட்சியின் மூத்த உறுப்பினர்களுக்கு பொற்கிழியை வழங்கினார்.

இந்த நிகழ்ச்சியில் பேசிய உதயநிதி, ”எனக்கு பேச்சைவிட செயல்தான் பிடிக்கும். அதனால் குறைந்த அளவே பேசுவேன். நான் வரும்போது என்னை ‘மூன்றாம் கலைஞர்’ என்று அழைத்தார்கள். மூன்றாம் கலைஞர், இளம் தலைவர் என்று என்னை அழைக்க வேண்டாம்; சின்னவர் என்றே என்னை அழைக்கலாம் ‘ஒரே கலைஞர் தான்’ அதனால் மூன்றாம் கலைஞர் என்று அழைக்க வேண்டும். அய்யனார்கோவில் ராசியானது என்கிறார்கள். எனக்கு ராசிகளில் நம்பிக்கை இல்லை” என்றார்.

Categories

Tech |