கன்னியாகுமரியில் புகழ் பெற்ற மண்டைக்காடு பகவதி பகவதி அம்மன் திருக்கோயில் மாசி திருவிழா தொடங்கி நடைபெற்று வருகிறது. இதில் தெலுங்கானா மற்றும் புதுச்சேரி கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் கலந்து கொண்டார். அப்போது பேசிய அவர் கூறியதாவது, “அன்னை பகவதியை தரிசிக்க வந்துள்ள பக்தர்கள் அனைவரையும் வருக வருக என வரவேற்கிறேன். நான் புதுச்சேரி மற்றும் தெலுங்கானாவில் துணைநிலை ஆளுநராக உள்ளேன். என்னை இயக்குவது அன்னை பகவதியின் சக்திதான் நான் இங்கு ஒரு ஆளுநராக வரவில்லை அன்னை பகவதியின் மகளாக வந்துள்ளேன்.
வைரஸ் தொற்று இன்னும் குறையவில்லை எனவே அனைவரும் முக கவசம் அணிவதை நிறுத்த வேண்டாம். வெளிநாடுகளில் ஒருவரை ஒருவர் சந்தித்துக் கொள்ளும்போது கைகுலுக்கி கொள்கிறார்கள். தமிழ்நாட்டில் கையெடுத்து வணக்கம் சொல்கிறோம் . இந்த பழக்கமே வைரஸ் தொற்றில் இருந்து நம்மை பாதுகாக்கும் முதலாவதாக நான் பிரதமர் மோடிக்கு நன்றி சொல்ல விரும்புகிறேன். இந்தியாவிற்கு தேவையான பல நல்ல திட்டங்களை செயல்படுத்தி வருகிறார். அதன் மூலம் நாடு முன்னேற்றம் அடைந்து வருகிறது. உக்ரைனில் போர் மேகம் சூழ்ந்துள்ளது. அங்கு சிக்கித் தவிக்கும் இந்தியர்களை மீட்க பிரதமர் மோடி பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறார். அதன் மூலம் நூற்றுக்கணக்கானோர் பலன் அடைந்துள்ளனர்.” இவ்வாறு அவர் கூறினார்.