தமிழகத்தில் சட்டமன்றத் தேர்தலில் தன்னை எதிர்த்துப் போட்டியிட உதயநிதி ஸ்டாலின் தயாரா என நடிகை குஷ்பு சவால் விடுத்துள்ளார்.
தமிழகத்தில் இன்னும் சில மாதங்களில் சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. அதனால் அனைத்து கட்சிகளும் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருவதால், தேர்தல் களம் சூடு பிடிக்க தொடங்கியுள்ளது. அனைத்துக் கட்சியினரும் ஒருவருக்கொருவர் விமர்சித்து தீவிர தேர்தல் பிரசாரத்தில் இறங்கியுள்ளனர். கடந்த சில நாட்களாகவே தமிழகத்தின் அனைத்து பகுதிகளிலும் அனைத்து கட்சியினரும் தேர்தல் பிரசாரம் செய்து வருகிறார்கள்.
இந்நிலையில் சட்டமன்ற தேர்தலில் பாஜக தரப்பில் எந்த தொகுதி ஒதுக்கினாலும் அதில் போட்டியிட தயார் என்று நடிகை குஷ்பு தெரிவித்துள்ளார். மேலும் தன்னை எதிர்த்துப் போட்டியிட உதயநிதி ஸ்டாலின் தயாரா என சவால் விடுத்துள்ளார். பாஜக அனைத்து மக்களுக்கும் நல்லது செய்யும் கட்சி என்பது இந்த தேர்தல் மூலம் வெளிப்படும் என அவர் கூறியுள்ளார்.