Categories
தேசிய செய்திகள்

என்னை எதுக்கு கூப்பிடல!… கலவரத்தில் முடிந்த திருமண வரவேற்பு நிகழ்ச்சி…. 25 பேருக்கு நேர்ந்த கதி?…. பரபரப்பு….!!!!

கேரளா திருவனந்தபுரம் அருகில் பலராம புரம் பகுதியில் இருக்கும் ஒரு திருமண மண்டபத்தில் திருமணவரவேற்பு நிகழ்ச்சியானது நடைபெற்று கொண்டிருந்தது. இந்நிலையில் அந்த மண்டபத்திற்கு வந்த ஒருவர், தன்னை திருமணத்துக்கு அழைக்காதது ஏன் என்று மணமகளின் தந்தையிடம் தகராறு செய்துள்ளார்.

அந்நபர் மணமகளின் பக்கத்து வீட்டுக்காரர் எனவும் அவருக்கும் மணமகளின் குடும்பத்திற்கும் ஏற்கனவே சில பிரச்சினைகள் இருந்துவந்ததாகவும் கூறப்படுகிறது. இந்நிலையில் நிகழ்ச்சிக்கு வந்த அவர் மணமகளின் தந்தையிடம் தகராறில் ஈடுபட்டதால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. அதன்பின் சிறிதுநேரத்தில் வாக்குவாதம் முற்றி ஒரு கட்டத்தில் மோதலாக மாறியது.

இருதரப்பைச் சேர்ந்தவர்களும் மாறிமாறி தாக்கிக்கொண்டதில் சுமார் 25 நபர்களுக்கு காயம் ஏற்பட்டது. இது தொடர்பாக தகவலறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து மோதலை தடுத்துநிறுத்தினர். இம்மோதல் சம்பவம் குறித்த காட்சிகள் இணையத்தளத்தில் வைரலாகி வருகிறது.

Categories

Tech |