தன்னை வேடிக்கை பார்க்கும் பெண் ஒருவரை தைவான் மீன் காட்சியகத்தில் உள்ள திமிங்கலம் ஒன்று முறைக்கும் சுவாரஸ்யமான புகைப்படம் ஒன்று வெளியாகியுள்ளது.
தைவானில் உள்ள உயிரியல் பூங்கா ஒன்றிற்கு தனது தோழியருடன் சென்றிருந்த ஹுவாங் சஞ்சுன் என்ற இளம்பெண் அங்கு உள்ள மீன் காட்சியகத்தில் பிரம்மாண்ட கண்ணாடித் தொட்டி ஒன்றில் இருந்த திமிங்கலத்தை பார்த்துக் ரசித்து கொண்டிருந்தார். அப்போது அந்த திமிங்கலம் அவரை திடீரென நெருங்கி முறைத்து பார்க்க ஆரம்பித்தது. இதனால் ஒன்றும் புரியாமல் பின்வாங்கிய சஞ்சுன் அந்த திமிங்கலத்தை மீண்டும் பார்த்தபோது அது மீண்டும் அந்த இளம்பெண்ணை நெருங்கி முறைத்து பார்த்ததுடன் வாயை திறந்து அவரை திட்டுவது போலவும் சைகை காட்டியுள்ளது.
இதையடுத்து அந்த திமிங்கலத்தை சஞ்சுன் ஒவ்வொரு முறையும் அருகில் சென்று பார்த்த போது அந்த திமிங்கலம் அவரை முறைத்து பார்த்துள்ளது. அதேபோல் சஞ்சுன்-ஐ அந்த திமிங்கலம் சுமார் ஒரு நிமிடம் முறைத்து விட்டு அதன் பின் அங்கிருந்து தொட்டியின் மறுபக்கத்திற்கு சென்று விட்டது. மேலும் வெளியான அந்த புகைப்படத்தை பார்க்கும் போது அந்த திமிங்கலம் என்னை எதற்கு வேடிக்கை பார்க்கிறாய் ? என்று அந்த இளம்பெண்ணிடம் சண்டை போடுவது போன்று உள்ளது.