ஆஸ்திரேலியாவில் தன் மகனுக்கு செலுத்தப்படும் குளுக்கோஸ் குழாயில் தாய் மலத்தை கலந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஆஸ்திரேலியாவில் சிட்னி பகுதியில் உள்ள ஒரு பெண் தனது 9 வயது மகனுடன் வசித்து வருகிறார். தற்போது அவரது மகனுக்கு ஏற்பட்ட ஆஸ்துமா பிரச்சினையின் காரணமாக மருத்துவமனையில் அனுமதித்தார். ஆனால் அச்சிறுவன் சிகிச்சை மேற்கொண்ட பிறகும் குணமடையவில்லை காய்ச்சல் ஏற்பட்டு ஏதோ முணுமுணுத்துக் கொண்டிருந்தான்.
சிறுவன் குணமடையாததற்கு என்ன காரணம் என்று மருத்துவர்களால் கண்டுபிடிக்க இயலவில்லை. இதனை தொடர்ந்து இரத்தத்தை பரிசோதனை செய்த மருத்துவர்கள் அதில் மலக்கிருமிகள் காணப்படுவதை கண்டறிந்தனர். இந்நிலையில் சிறுவன் தன் தாயிடம் என்னை ஏன் நோயாளி ஆக்குகிறீர்கள் என்றும் குளுக்கோஸ் செல்லும் குழாயில் ஏன் இப்படி செய்கிறீர்கள் என்றும் கூறுவதை செவிலியர்கள் கவனித்தனர்.
இதுகுறித்து அந்த பெண்ணிடம் கேட்டபோது அச்சிறுவனை மருத்துவமனை வைத்திருப்பதற்காக குளுக்கோஸ் செல்லும் குழாயில் மலத்தை கலந்துள்ளதாக கூறியுள்ளார். இந்த தாய் செய்த செயல் மருத்துவர்களையும் செவிலியர்களையும் அதிர்ச்சி அடையச் செய்தது. இது குறித்து காவல்துறையினரிடம் மருத்துவர்கள் புகார் தெரிவித்தனர். குழந்தையின் உடலுக்குள் நச்சுப்பொருளை செலுத்தி ஆபத்தை விளைவிக்கும் குற்றம் என்ற அடிப்படையில் தாயின் மீது வழக்குப்பதிந்து காவல்துறையினர் விசாரணை செய்து வருகின்றனர்.