சென்னை மறைமலை நகரிலும், குஜராத்திலும் செயல்பட்டு வரும் போர்டு ஆலைகளை மூட முடிவு செய்திருப்பதாக அந்நிறுவனம் தெரிவித்துள்ளது. இதன் காரணமாக பல்லாயிரக்கணக்கான தொழிலாளர்கள் வேலை இழந்து தவிக்கும் நிலை உருவாகிறது. இந்நிலையில் இது குறித்து செய்தியாளர் கேட்ட கேள்விக்கு பதிலளித்து பேசிய சீமான், ஏற்கனவே நோக்கியா மூடப்பட்டது. முதல்வர் ஸ்டாலின் துணை முதல்வராக இருந்தபோது தான் நோக்கியா வந்தது.
திடீரென்று 2000 கோடி கடன் வைத்து ஓடி விட்டது. இப்போது போர்டு நிறுவனம் ஓடுகிறது. அவர்களுக்கு இங்கே நிலத்தடி நீர் இல்லை, தடையற்ற மின்சாரம் இல்லை என்றால் போய்விடுவார்கள். அந்த நிறுவனங்கள் வந்தால் வேலைவாய்ப்பு, வளர்ச்சி என்று பேசியவர்கள் தான் அதற்கு பதில் சொல்ல வேண்டும். என்னை ஏன் கேட்கிறீர்கள்? என்று கேள்வி எழுப்பியுள்ளார்.