சிறைக்கைதி மின்சாரம் தாக்கி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
சிவகங்கை மாவட்டத்தில் உள்ள புரசடி உடைப்பு திறந்தவெளி சிறையில் கோவில்பட்டியை சேர்ந்த கருப்பசாமி என்பவர் கொலை வழக்கில் கடந்த 2018-ஆம் ஆண்டு கைதாகி சிறையில் அடைக்கப்பட்டு இருந்தார். இந்நிலையில் 4 ஆண்டுகளாக கருப்பசாமியின் உறவினர்கள் யாரும் கருப்பசாமியை பார்க்க வரவில்லை.
இதனையடுத்து கருப்பசாமி சிறைச்சாலை அதிகாரிகளிடம் பரோலில் வெளியே செல்ல அனுமதி கேட்டுள்ளார். ஆனால் அதிகாரிகள் அனுமதி அளிக்கவில்லை. இதனால் மன உளைச்சலில் இருந்த கருப்பசாமி சிறைச்சாலை வளாகத்தில் அமைந்துள்ள உயர் அழுத்த மின் கம்பத்தில் எறியுள்ளார். அப்போது திடீரென மின்சாரம் தாக்கி கருப்பசாமி கீழே விழுந்துவிட்டார். இதில் படுகாயமடைந்த கருப்பசாமியை அருகில் இருந்த சிறை காவலர்கள் மீட்டு சிகிச்சைக்காக அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் அனுமதித்தனர். ஆனால் அங்கு அளிக்கப்பட்ட சிகிச்சை பலனின்றி கருப்பசாமி பரிதாபமாக உயிரிழந்துவிட்டார். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.