தமிழ் திரையுலகிற்கு முதன் முதலில் விரும்புகிறேன் என்ற படத்தின் மூலமாக அறிமுகமானவர் சினேகா. ஆனால் அதற்கு முன்னதாக மாதவனுடன் சேர்ந்து நடித்த என்னவளே என்ற படம் வெளியானது. இதனையடுத்து சினேகா தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் என்று பல படங்களிலும் நடித்து வருகிறார். பல தொலைக்காட்சி நிகழ்வுகளில் நிகழ்ச்சிகளிலும் பங்கேற்று வருகிறார்.
இவர் புன்னகை அரசி என்று ரசிகர்களால் அழைக்கப்படுபவர். இந்த நிலையில் நடிகை சினேகா பரபரப்பு புகார் ஒன்றை அளித்துள்ளார். அதன்படி, ஆந்திராவை தலைமையிடமாகக் கொண்ட தனியார் சிமெண்ட் நிறுவனம் ஒன்று தன்னையும், தன் கணவனையும் ஏமாற்றிவிட்டதாக காவல் நிலையத்தில் பரபரப்பு புகார் தெரிவித்துள்ளார். ரூபாய் 25 லட்சம் முதலீடு செய்தால் மாதந்தோறும் 1.80 லட்சம் கிடைக்கும் என்று கூறி தன்னை ஏமாற்றிவிட்டதாக புகார் தெரிவித்துள்ளார்.