பிரபல நாட்டில் 3 நிமிடத்தில் பாஸ்தா செய்யலாம் என விளம்பரம் செய்த நிறுவனம் மீது வழக்கு தொடரப்பட்டுள்ளது.
அமெரிக்காவில் உள்ள புளோரிடா பகுதியில் அமண்டா ரமிரெஸ் என்பவர் வசித்து வருகிறார். இவர் பிரபல உணவு நிறுவனமான கிராப்ட் ஹெய்ன்ஸ் மீது கோர்ட்டில் வழக்கு ஒன்றை தொடர்ந்துள்ளார். அதில் இந்த நிறுவனம் தனது பாஸ்தா தயாரிப்புகள் வெறும் 3.5 நிமிடத்தில் வெந்து விடும் என விளம்பரம் செய்தார்கள். அதை வாங்கி நான் பயன்படுத்தும் போது அதிக நேரமானது. எனவே எனக்கு 40 கோடி ரூபாய் வழங்க வேண்டும்.
இதனையடுத்து 3.5 நிமிடங்களில் மைக்ரோவேவில் தயார் செய்து விடலாம் என்று அந்த நிறுவனம் கூறுவது தவறு. இந்த நேரத்தில் உணவு சமைக்க முடியாது. மேலும் பாஸ்தா தயாரிக்க அதிக நேரம் எடுக்கும் என அதில் கூறப்பட்டுள்ளது. இதற்கு நிறுவன அதிகாரிகள் அந்த பெண் மீது கடுமையான நடவடிக்கை எடுப்பதாக கூறியுள்ளனர்.