Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

என்னை ஏமாற்றி விட்டீர்கள்…. வேட்பாளர் செயல்…. போலீஸ் விசாரணை….!!

வாக்கு எண்ணும் மையத்தில் வேட்பாளர் தகராறு செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சிவகங்கை மாவட்டத்திலுள்ள 20 -வது வார்டில் நாம் தமிழர் கட்சியின் சார்பில் அம்சத்ராணி என்பவர் போட்டியிட்டார். இந்நிலையில் நேற்று வாக்கு சாவடியில் நடைபெற்ற வாக்கு எண்ணிக்கையில் அவனுக்கு 9 வாக்குகள் மட்டுமே கிடைத்துள்ளது. இதனால் ஆத்திரமடைந்த அம்சத்ராணி வாக்கு எண்ணும் மையத்தில் தனது வாக்குகளை ஏமாற்றி விட்டதாக கூறி   தகராறு செய்துள்ளார் . அப்போது அங்கு பணியில் ஈடுபட்டுக்கொண்டிருந்த காவல்துறையினர் அம்சத் ராணியிடம் பேச்சுவார்த்தை நடத்தி அவரை அங்கிருந்து வெளியேறியுள்ளனர். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

Categories

Tech |