Categories
தேசிய செய்திகள்

என்னை ஒடுக்குகிறார்கள்… காங்கிரஸில் இருந்து விலகிய குஷ்பு… சோனியா காந்திக்கு கடிதம்…!!

காங்கிரஸ் கட்சியில் அடிப்படை உறுப்பினராக இருந்த குஷ்பு தான் பதவியை விட்டு விலகுவதாக அறிவித்துள்ளார்.

சோனியா காந்திக்கு எழுதிய கடிதத்தில் “கட்சியின் நலனுக்காக உண்மையுடன் இருக்க விருப்பப்பட்ட என்னை போன்றவர்களை கட்சியில் உயர்பதவியில் இருப்பவர்கள் மற்றும் கள நிலவரம் தெரியாதவர்கள் ஒடுக்குகின்றனர். நான் காங்கிரஸ் கட்சியில் பணம் புகழ் கிடைக்கும் என்று சேரவில்லை.

நன்றாக யோசித்த பிறகு தான் கட்சியை விட்டு விலக முடிவு செய்தேன். கட்சியின் அடிப்படை உறுப்பினர் உட்பட அனைத்துப் பதவிகளில் இருந்தும் நான் விலகுகிறேன். எனக்கு உங்கள் மீதான மதிப்பு என்றும் மாறாமல் அப்படியே இருக்கும். ராகுல் காந்தி போன்ற மூத்த தலைவர்களுக்கு நான் எனது நன்றியை தெரிவித்துக் கொள்கின்றேன்” என குறிப்பிட்டிருந்தார்.

Categories

Tech |