தன்னை கருணை கொலை செய்யுமாறு மூதாட்டி கலெக்டருக்கு மனு அனுப்பிய சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
திருவண்ணாமலை மாவட்டத்தில் ஆரணி பகுதியில் சின்ன குழந்தை என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு வயது 95 ஆகும். இவருடைய கணவரான தர்மன் கடந்து சில வருடங்களுக்கு முன்பு இறந்து விட்டார். இவருக்கு ராஜேந்திரன், நடராஜன், குமரேசன் என மூன்றும் மகன்கள் இருந்துள்ளனர். இதில் குமரேசனம் நடராஜனும் இறந்து விட்டனர். இதனால் மற்றொரு மகனான ராஜேந்திரனுடன் சின்ன குழந்தை வசித்து வருகின்றார். கடந்த சில நாட்களுக்கு முன்பு மூதாட்டிக்கு ஏற்பட்ட புற்றுநோயால் அவருடைய கண்பார்வை பறிபோனது. இதனை பயன்படுத்திக் கொண்ட நடராஜனின் மகனான கார்த்திக் என்பவர் கடந்த 2021 ஆம் ஆண்டு மூதாட்டியின் பெயரில் உள்ள வீட்டின் சொத்தை தனது பெயருக்கு எழுதி வாங்கி உள்ளார்.
இதனை அவர் ஆரணி சார் பதிவாளர் அலுவலகத்திலும் பதிவு செய்துள்ளார். இது குறித்த அறிந்தவுடன் சின்ன குழந்தையும் ராஜேந்திரனும் அதிர்ச்சி அடைந்தனர். தன்னுடைய சொத்தை ஏமாற்றி எழுதி வாங்கிய பேரனிடம் இருந்து அதனை மீட்டு தருமாறு சின்ன குழந்தை ஆரணி சப் கலெக்டர் தனலட்சுமியிடம் பலமுறை மனு அளித்துள்ளனர். ஆனால் இதுவரை சப் கலெக்டர் அலுவலகத்தில் இருந்து எந்தஒரு நடவடிக்கையும் எடுக்கவில்லை. இந்நிலையில் மாவட்ட நிர்வாகம் மனு அளித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்காததால் விரக்தியில் இருந்த சின்னம்மாள் வாழ பிடிக்கவில்லை எனக் கூறி தன்னை கருணை கொலை செய்யுமாறு மாவட்ட கலெக்டருக்கு பதிவு தபால் மூலம் கோரிக்கை மனுவை அனுப்பி வைத்துள்ளார்.