Categories
மாவட்ட செய்திகள் விழுப்புரம்

“என்னை கல்யாணம் பண்ணிக்கோ” வாலிபர் செய்த வேலை… போலீஸ் நடவடிக்கை…!!

பெண்ணை  ஏமாற்றி கர்ப்பமாக்கிய வாலிபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள செஞ்சியில்  கிராமத்தில் 26 வயது இளம்பெண் வசித்து வந்துள்ளார். இவருக்கும்   அதே பகுதியை சேர்ந்த  மணிகண்டன் என்பவருக்கும்  பழக்கம் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் மணிகண்டன் அந்தப் பெண்ணை திருமணம் செய்து கொள்வதாக  ஆசை வார்த்தை கூறி ஏமாற்றி பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். தற்போது  அந்தப் பெண் 6 மாத கர்ப்பமாக இருப்பதால் தன்னை திருமணம் செய்து கொள்ளுமா  மணிகண்டனிடம் கேட்டுள்ளார்.

அதற்கு  மறுப்பு தெரிவித்து   மணிகண்டன்   அந்த பெண்ணிற்கு கொலை மிரட்டல் விடுத்துள்ளார். இதனால் கோபம் அடைந்த அந்த  பெண் செஞ்சி  அனைத்து மகளிர் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த  காவல்துறையினர் மணிகண்டனை கைது செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Categories

Tech |