பெண்ணின் புகைப்படத்தை ஆபாசமாக மார்பிங் செய்து மிரட்டிய குற்றத்திற்காக வாலிபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
நீலகிரி மாவட்டத்தில் உள்ள ஓவேலி பேரூராட்சி பகுதியில் 28 வயதுடைய பெண் வசித்து வருகிறார். இந்த பெண் கூடலூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் ஒரு புகார் அளித்துள்ளார். அந்த புகாரில் ஒரு நபர் எனது புகைப்படத்தை ஆபாசமாக மார்பிங் செய்து திருமணம் செய்து கொள்ளுமாறு மிரட்டுகிறார். எனவே அந்த நபர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என பெண் புகாரில் குறிப்பிட்டுள்ளார்.
அந்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் நடத்திய விசாரணையில் விழுப்புரத்தை சேர்ந்த மனோகரன் என்பவர் பெண்ணின் புகைப்படத்தை ஆபாசமாக மார்பிங் செய்து மிரட்டியது தெரியவந்துள்ளது. இதனை அடுத்து மனோகரனை காவல்துறையினர் கைது செய்து சிறையில் அடைத்துவிட்டனர்.