Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

“என்னை காதலிக்க வேண்டும்” மாணவிக்கு கொலை மிரட்டல்…. போலீஸ் அதிரடி….!!

மாணவிக்கு வாலிபர் கொலை மிரட்டல் விடுத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள வெள்ளிச்சந்தை அருகே மேலசங்கரன்குழி  பகுதியில் விஜயகுமார் என்பவர் வசித்து வருகிறார். இவர் வெள்ளமோடி பகுதியில் இருக்கும் பாலிடெக்னிக் கல்லூரியில் 3-ம் ஆண்டு படித்து வருகிறார். இந்த கல்லூரி வளாகத்திற்குள் இருக்கும் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் ஒரு மாணவி முதலாமாண்டு ஆண்டு படித்து வருகிறார். இந்நிலையில் விஜயகுமார் முதலாம் ஆண்டு படிக்கும் மாணவியிடம் தன்னை காதலிக்குமாறு கூறி பல நாட்களாக தொந்தரவு கொடுத்து வந்துள்ளார்.

ஆனால் மாணவி அதற்கு மறுப்பு தெரிவித்துள்ளார். இதனையடுத்து விஜயகுமார் ஒருநாள் கத்தியை காட்டி மாணவியை மிரட்டி தன்னை காதலிக்குமாறு கூறி கொலை மிரட்டல் விடுத்துள்ளார். இதுகுறித்து மாணவி வெள்ளிச்சந்தை காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரின்படி வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் விஜயகுமாரை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Categories

Tech |