பிக்பாஸ் வீட்டிலிருந்து வெளியேறிய சுசித்ரா இன்ஸ்டாகிராமில் ஆன்மீக புகைப்படம் ஒன்றைப் பகிர்ந்துள்ளார்.
உலக நாயகன் கமல்ஹாசன் தொகுத்து வழங்கும் பிக்பாஸின் 4-வது சீசன் விறுவிறுப்பாக நடந்து கொண்டிருக்கிறது. இதுவரை பிக்பாஸ் வீட்டில் இருந்து ரேகா ,வேல் முருகன் மற்றும் சுரேஷ் ஆகியோர் மக்களின் குறைந்த வாக்குகளைப் பெற்று வெளியேறியுள்ளனர். மேலும் அர்ச்சனா மற்றும் சுசித்ரா இருவரும் வைல்ட் கார்ட் என்ட்ரியாக பிக்பாஸ் வீட்டிற்குள் சென்றுள்ளனர்.
இந்நிலையில் இந்த வாரம் மக்களின் குறைவான வாக்குகளைப்பெற்று சுசித்ரா வெளியேறப் போவதாக சமூக வலைத்தளங்களில் தகவல் வெளியாகிவந்தது. தற்போது சுசித்ரா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ‘என்னைக் காப்பவர்’ என்று கூறி ஆன்மீக புகைப்படம் ஒன்றை பதிவிட்டுள்ளார். இந்தப் பதிவிற்கு அவரது ரசிகர்கள் வாழ்த்துக்கள் தெரிவித்து வருகின்றனர். இதன்மூலம் இந்த வாரம் பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேறியவர் சுசித்ரா தான் என்பது உறுதியாகிவிட்டது.