நடிகர் அர்பாஸ்கானை திருமணம் செய்து விவாகரத்து பெற்று பிரிந்த 50 வயதான பிரபல இந்தி நடிகை மலைக்கா அரோரா 2வது திருமணத்திற்கு தயாராகி வருகிறார். அதாவது, தயாரிப்பாளர் போனி கபூரின் மகனான அர்ஜுன் கபூரை விரைவில் திருமணம் செய்ய இருக்கிறார். ஷாருக்கானின் உயிரே திரைப்படத்தில் தையா தையா பாடலுக்கு குத்தாட்டம் போட்டவர் மலைக்கா என்பது குறிப்பிடத்தக்கது.
இதனிடையில் இந்த வயதிலும் உங்களுக்கு 2வது திருமணம் தேவைதானா என்று மலைக்கா அரோராவை விமர்சித்தும், கிண்டல் செய்தும் பல பேர் சமூகவலைத்தளத்தில் பதிவுகள் வெளியிட்டு வருகின்றனர். இதற்கு பதிலளித்து மலைக்கா அரோரா கூறியதாவது “ஆண்கள் விவாகரத்து செய்துவிட்டு எத்தனை திருமணம் செய்தாலும் அவர்களுக்கு மரியாதை உள்ளது. மேலும் விவாகரத்து செய்து திருமணம் செய்துகொள்ளும் நடிகர்களும் மதிக்கப்படுகின்றனர்.
ஆனால் ஒரு பெண் விவாகரத்து செய்து மீண்டுமாக திருமணம் செய்தால் அவளை கீழ்த் தரமாக பார்க்கும் எண்ணம்தான் இந்த சமூகத்தில் உள்ளது. இதற்கிடையில் விவாகரத்தான பெண்கள் நிலைமை மிகவும் மோசமாக இருக்கிறது. தினசரி என்னை பற்றிய மோசமான விமர்சனங்கள் சமூகவலைத்தளத்தில் குவிகிறது. இந்த விமர்சனங்கள் எனக்கு வருத்தம் அளிக்கிறது. எனினும் அதை கடந்து சென்றுவிடுகிறேன்” என்று கூறினார்.