நீதிமன்ற ஊழியருக்கு கொலை மிரட்டல் விடுத்த குற்றத்திற்காக கணவர் உள்பட 3 பேர் மீது காவல்துறையினர் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
திண்டுக்கல் மாவட்டத்திலுள்ள நேருஜி நகரில் முன்னாள் ராணுவ வீரரான பிரபு குமார் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சசிகலா என்ற மனைவி உள்ளார். இவர் நிலக்கோட்டை மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் அலுவலக உதவியாளராக வேலை பார்த்து வருகிறார். இந்நிலையில் சசிகலா நிலக்கோட்டை காவல் நிலையத்தில் ஒரு புகார் மனுவை அளித்துள்ளார். அந்த மனுவில் கூறியிருப்பதாவது, எனது கணவர் பிரபு குமார், மாமியார் தங்கம்மாள், மாமனார் மகாராஜன் ஆகியோர் எனது ஏ.டி.எம் கார்டு மற்றும் நகைகளை வாங்கி வைத்துக்கொண்டு கொடுமைப்படுத்துகின்றனர்.
மேலும் 3 பேரும் இணைந்து எனக்கு கொலை மிரட்டல் விடுக்கின்றனர். எனவே அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என சசிகலா புகாரில் குறிப்பிட்டுள்ளார். அந்த புகாரின் பேரில் காவல்துறையினர் பிரபு குமார் உள்பட 3 பேர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.