சினிமா துறையை சேர்ந்த ஒருவர் கமிஷனர் அலுவலகத்தில் புகார் மனு கொடுத்துள்ளார்.
சினிமா துறையில் பிரபல ஸ்டண்ட் மாஸ்டராக ஜாக்குவார் தங்கம் இருக்கிறார். இவர் சென்னை கமிஷனர் அலுவலகத்தில் புகார் மனு ஒன்றைக் கொடுத்துள்ளார். அந்த மனுவில் நான் தென்னிந்திய திரைப்பட சங்கம் மற்றும் தயாரிப்பாளர்கள் சங்கம் கில்டு தலைவராக இருக்கிறேன். எங்க சங்கத்தில் இருந்து 3 பேர் நீக்கப்பட்டுள்ளனர். இவர்கள் 3 பேரின் தூண்டுதலின் மூலமாக எனக்கு அடிக்கடி செல்போன் மூலமாக கொலை மிரட்டல் வருகிறது. இது குறித்து ஏற்கனவே நான் கமிஷனர் அலுவலகத்தில் புகார் கொடுத்துள்ளேன். இந்நிலையில் ஒருவர் வீடியோ ஒன்றினை இணையதளத்தில் வெளியிட்டுள்ளார்.
அந்த வீடியோ பதிவில் நான் தற்கொலை செய்து சாகப் போகிறேன் என்றும் என்னுடைய மரணத்திற்கு ஜாக்குவார் தங்கம் தான் காரணம் எனவும் அவர் பேசியுள்ளார். அந்த வீடியோ பதிவில் என்னுடைய தொலைபேசி நம்பரும் வெளியிடப்பட்டுள்ளது. இதன் காரணமாக எனக்கு செல்போன் மூலம் கொலை மிரட்டல் வருகிறது. எனவே இணையதளத்தில் அவதூறான வீடியோ வெளியிட்ட நபரின் மீதும் எனக்கு கொலை மிரட்டல் விடும் நபரின் மீதும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என அந்த மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.