Categories
தேசிய செய்திகள்

என்னை கொலை செய்ய திட்டம்… மம்தா பானர்ஜி குற்றச்சாட்டு..!!

என்னை கொலை செய்ய திட்டமிடுவதாக மம்தா பானர்ஜி பரபரப்பு குற்றச்சாட்டை தெரிவித்துள்ளார்.

இந்தியாவில் 5 மாநிலங்களில் சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இதனால் அரசியல் கட்சிகள் பரபரப்பாக பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். மேற்கு வங்க மாநிலத்தில் மம்தா பானர்ஜி பிரச்சாரத்தில் ஈடுபட்டுக் கொண்டிருந்த போது தாக்குதல் நடத்தியதாக கூறப்பட்டு அவர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். நாற்காலியில் அமர்ந்து பிரச்சாரத்தில் ஈடுபட்டிருந்தார். தற்போது மம்தா பானர்ஜி ஒரு பரபரப்பு குற்றச்சாட்டை வைத்துள்ளார்.

உள்துறை அமைச்சர் அமைச்சர் அமித்ஷாவின் பொதுக்கூட்டங்களுக்கு மேற்கு வங்கத்தில் மக்கள் யாரும் வருவதில்லை. இதனால் அமைச்சர் அமித்ஷா விரக்தி அடைந்து உள்ளார். இதனால் என்னுடைய பாதுகாப்பு அதிகாரி மூலமாக என்னை கொலை செய்ய திட்டமிட்டார். அதனால் தான் என்னுடைய பாதுகாப்பு அதிகாரியை தேர்தல் ஆணையம் நீக்கியுள்ளது என மம்தா குற்றச்சாட்டு தெரிவித்துள்ளார்.

Categories

Tech |