Categories
அரசியல் மாநில செய்திகள்

என்னை கொல்ல முயற்சி நடக்கிறது – அமைச்சர் கடம்பூர் ராஜு பரபரப்பு புகார்

தமிழகத்தில் ஏப்ரல் 6-ஆம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. அதனால் அனைத்து கட்சிகளும் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருவதால் தேர்தல் களம் சூடு பிடிக்க தொடங்கியுள்ளது. ஒவ்வொரு கட்சியினரும் தங்கள் எதிர்கட்சியினரை கடுமையாக விமர்சித்து தேர்தல் பிரசாரம் செய்து வருகிறார்கள். அதிலும் குறிப்பாக அதிமுக மற்றும் திமுக இடையே கடும் மோதல் போக்கு நிலவி வருகிறது. இதற்கு மத்தியில் சட்டமன்ற தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் பட்டியலை ஒவ்வொரு கட்சியும் வெளியிட்டு வருகிறது.

மறுபக்கம் மக்களைக் கவர அனைத்து கட்சியினரும் மக்களிடம் நேரடி தேர்தல் பிரசாரத்தில் களமிறங்கியுள்ளனர். மேலும் மக்களை கவரும் வண்ணம் கவர்ச்சிகரமான அறிவிப்புகளை வெளியிட்டு வருகின்றனர். இந்நிலையில் டிடிவி தினகரன் கோவில்பட்டி தொகுதியில் கடம்பூர் ராஜூவை எதிர்த்து போட்டியிடுகிறார். இதையடுத்து தற்போது கடம்பூர் ராஜூ, அமமுகவினர் தோற்றுவிடுவோம் என பயந்து தன்னை கொல்ல முயற்சிப்பதாகவும், நேற்று இரவு தான் சென்ற காரை மறித்து பட்டாசுகளை வீசியதாகவும் பரபரப்பு குற்றசாட்டை வைத்துள்ளார்.

Categories

Tech |