Categories
சினிமா தமிழ் சினிமா

“என்னை செதுக்கியவர் பாரதிராஜா”…. நடிகர் பொன்வண்ணன் உருக்கம்….!!!

என்னை செதுக்கியவர் பாரதிராஜா என்று நடிகர் பொன்வண்ணன் ஒரு பேட்டியில் தெரிவித்துள்ளார்.

புது நெல்லு புது நாத்து என்ற திரைப்படத்தில் வசனம் எழுதியதன் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் நடிகரும் இயக்குனருமான பொன்வண்ணன். இவர் சிறுவயது முதலே நாடகங்களில் நடித்து வந்துள்ளார். ஆனால் அப்போது இவருக்கு பெரிய நடிகராக வேண்டுமென்ற ஆசை இல்லை. இவருக்கு ஓவியராக வேண்டும் என்ற கனவு இருந்தது. அதைத் தொடர்ந்து எதிர்பாராதவிதமாக எம்எல்ஏ விடுதியில் கோவை தம்பி சாரை சந்தித்தபோது அவர் மூலமாக சினிமாவுக்குள் நுழைந்துள்ளார்.

பாரதிராஜாவிடம் உதவி இயக்குனராக சேர்ந்து அந்த ஆறு படங்கள் செய்த காலம் தான் எனக்கு சிறந்த காலகட்டம் என்று தெரிவித்தார். மேலும் பாரதிராஜா தான் தன்னை சினிமாவில் செதுக்கியவர் என்றும், அவருடன் உதவி இயக்குனராக பணியாற்றிய காலம் தனக்கு சிறந்த காலகட்டம் என்றும் கூறியுள்ளார். சினிமாவில் நான் எத்தனை தூரம் போவேன் எனக்கு தெரியாது எனவும் தெரிவித்துள்ளார்.

Categories

Tech |