தொழிலாளி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தீக்குளிக்க முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஈரோடு மாவட்டத்தில் உள்ள அந்தியூர் சிவசக்தி நகரில் தொழிலாளியான அலாவுதீன் என்பவர் வசித்து வருகிறார். இவர் தனது மனைவி மற்றும் 2 குழந்தைகளுடன் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு சென்று தான் மறைத்து வைத்திருந்த மண்ணெண்ணெயை உடல் முழுவதும் ஊற்றி தீக்குளிக்க முயற்சி செய்துள்ளார். இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுக்கொண்டிருந்த காவல்துறையினர் அலாவுதீனை தடுத்து நிறுத்தி விசாரணை நடத்தியுள்ளனர்.
அந்த விசாரணையில் அவர் கூறியதாவது, ஒரு வழக்கு தொடர்பாக காவல்துறையினர் என்னை விசாரணைக்கு அழைத்து செல்வதாக கூறி தாக்கினர். இதனால் மன உளைச்சலில் குடும்பத்துடன் தற்கொலை செய்து கொள்வதற்காக மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு வந்ததாக அலாவுதீன் தெரிவித்துள்ளார். இதனையடுத்து காவல்துறையினர் அலாவுதீனை காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்று விசாரணை நடத்தி வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.