Categories
மாவட்ட செய்திகள் விருதுநகர்

தீவிரமாக நடைபெற்ற தேர்தல் …. திடீரென ஏற்பட்ட கலவரம் …. போலீசார் விசாரணை….!!

வாக்குச்சாவடியில் அ.தி.மு.க. மற்றும் தே .மு.தி .கவினர் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது.

விருதுநகர் மாவட்டத்தில் உள்ள ரத்தின விலாஸ் பள்ளியில் சிவகாசி 26-வது  வார்டு காண வாக்குச்சாவடி அமைக்கப்பட்டுள்ளது. இங்கு காலையிலிருந்து பொதுமக்கள் ஆர்வத்துடன் தங்களது வாக்குகளை செலுத்தி வந்தனர். இந்நிலையில் தி.மு.க. மற்றும் தே.மு.தி.கவை சேர்ந்த சிலர் வாக்களிக்க வந்த வாக்காளர்களிடம் வாக்கு கேட்டுள்ளனர்.

இதில் இரு தரப்பினருக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. அப்போது அங்கு பணியில் ஈடுபட்டுக்கொண்டிருந்த காவல்துறையினர் இருதரப்பினரையும் சமாதானம் செய்துள்ளனர். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

Categories

Tech |