வெல்டிங் பட்டறை உரிமையாளர் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
திருச்சி மாவட்டத்திலுள்ள நவல்பட்டு அண்ணாநகர் பகுதியில் சேகர் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் வெல்டிங் பட்டறை வைத்த நடத்தி வந்துள்ளார். இந்நிலையில் சேகர் புதிதாக வீடு கட்டுவதற்காக தில்லை நகரில் இருக்கும் பஜாஜ் பைனான்ஸ் நிறுவனத்தில் கடன் வாங்கியுள்ளார். இதனை அடுத்து ஒரு மாத தவணை தொகையை கட்டுவதற்கு தாமதமானதால் நிதி நிறுவன ஊழியர்கள் சேகரை திட்டியதாக கூறப்படுகிறது. இதனால் மன உளைச்சலில் இருந்து சேகர் திருச்சி நீதிமன்றத்திற்கு அருகில் வைத்து தனது உடல் முழுவதும் பெட்ரோலை ஊற்றி தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டார்.
இதனையடுத்து தீ காயங்களுடன் கிடந்த சேகரை காவல் துறையினர் மீட்டு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். ஆனால் மருத்துவமனையில் அளிக்கப்பட்ட சிகிச்சை பலனின்றி சேகர் பரிதாபமாக உயிரிழந்துவிட்டார். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.