இளம்பெண்ணை திருமணம் செய்ய மறுத்த காதலன் கைது செய்யப்பட்டுள்ளார்.
கரூர் மாவட்டத்திலுள்ள வாளாந்தூர் பகுதியில் ஓட்டுநரான சாந்தகுமார்(23) என்பவர் வசித்து வருகிறார். கடந்த ஐந்து ஆண்டுகளாக சாந்தகுமாரும், 20 வயதுடைய இளம் பெண்ணும் காதலித்து வந்தனர். இந்நிலையில் திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தைகள் கூறி சாந்தகுமார் இளம்பெண்ணுடன் நெருக்கமாக பழகியுள்ளார்.
கடந்த சில நாட்களுக்கு முன்பு தன்னை திருமணம் செய்து கொள்ளுமாறு இளம்பெண் கூறியதற்கு சாந்தகுமார் மறுப்பு தெரிவித்துள்ளார். இதனை கேட்டு அதிர்ச்சியடைந்த இளம்பெண் குளித்தலை அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அந்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த போலீசார் சாந்தகுமாரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.