Categories
அரசியல் மாநில செய்திகள்

என்னை நடிகையாக பார்க்காதீங்க… நடிகை குஷ்பு அதிரடி…!!!

என்னை யாரும் நடிகையாக பார்க்காமல் பாஜக தொண்டர் களில் ஒருவராக பாருங்கள் என்று நடிகை குஷ்பு தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் இன்னும் சில மாதங்களில் சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. அதனால் அனைத்து கட்சிகளும் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருவதால், தேர்தல் களம் சூடு பிடிக்க தொடங்கியுள்ளது. இதனையடுத்து அனைத்து கட்சியினரும் ஒருவரை ஒருவர் விமர்சித்து தேர்தல் பிரச்சாரத்தில் இறங்கியுள்ளனர். இந்நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்னர் நடிகை குஷ்பு பாஜகவில் இணைந்தார். அதன் பிறகு பல்வேறு கருத்துக்களை அவர் தெரிவித்து வருகிறார்.

அதன்படி கோட்டையை கைப்பற்றுவதே பாஜகவின் நோக்கம், அதற்கு முன் சேப்பாக்கம் தொகுதியைக் கைப்பற்ற வேண்டும் என்று அவர் சூளுரைத்துள்ளார். மேலும் ரோடு மற்றும் தெருமுனை என மக்கள் எங்கெல்லாம் இருக்கிறார்களோ அங்கு பிரசாரம் செய்ய தயாராக உள்ளேன். என்னை நடிகையாக பார்க்காதீர்கள், பாஜக தொண்டர்களில் ஒருவராக பாருங்கள் என்று அவர் தெரிவித்துள்ளார்.

Categories

Tech |