தனது காதலை நிரூபிக்க பத்தாம் வகுப்பு படிக்கும் சிறுமி விஷம் குடித்து உயிரிழந்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஜார்காண்ட் மாநிலத்தை சேர்ந்த பத்தாம் வகுப்பு படிக்கும் மாணவி ரியா. இவர் அதே பகுதியை சேர்ந்த இளைஞர் ஒருவரை காதலித்து வந்துள்ளார். இந்நிலையில் சம்பவத்தன்று தன்னுடைய காதலை அந்த இளைஞரிடம் வெளிப்படுத்தியுள்ளார். அப்போது அந்த இளைஞர் நீ என்னை உண்மையாக காதலிக்கிறாயா? அப்படி என்றால் நீ விஷம் குடிப்பாயா? என்று கேட்டுள்ளார். இதனையடுத்து ரியா தனது காதல் உண்மையானது என்று நிரூபித்து காதலனை திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்ற ஆசையில் அந்த நபர் கூறியவாறு விஷத்தை எடுத்து குடித்துள்ளார்.
அதன் பின்னர் உயிருக்கு ஆபத்தான நிலையில் அச்சிறுமியை மீட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக கொண்டு சென்றுள்ளனர். ஆனால் சிகிச்சை பலனின்றி அச்சிறுமி பரிதாபமாக உயிரிழந்துள்ளார். இச்சம்பவம் தொடர்பாக காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.