Categories
அரசியல் தேசிய செய்திகள்

என்னை பதவி விலக சொல்ல அவர் யார்…? ஹரியானா முதல்வர் கடும் சாடல்…!!!

ஹரியானா மாநிலம் கர்னூல் மாவட்டத்தில் பாஜகவைச் சேர்ந்த முதலமைச்சர் மனோகர் லால் கட்டார் தலைமையில் கூட்டம் நடைபெற்றதற்கு எதிர்ப்பு தெரிவித்து விவசாயிகள் அங்கு  போராட்டத்தை நடத்தினர். இதையடுத்து போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீது காவல்துறையினர் தடியடி நடத்தியதில் சிலர் காயம் அடைந்தனர். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து ராகுல் காந்தி உள்ளிட்ட எதிர்க்கட்சி தலைவர்கள் பலரும் தங்களுடைய கண்டனத்தை தெரிவித்து வருகின்றனர்.

மேலும் விவசாயிகள் மீது தடியடி நடத்த தூண்டிய அரியானா முதலமைச்சர் பதவி விலக வேண்டும் என்று பஞ்சாப் அமைச்சர் அமிரீந்தர் சிங் தெரிவித்திருந்தார். இந்த நிலையில் ஹரியானா மாநில முதலமைச்சர் செய்தியாளர்களை சந்தித்துப் பேசுகையில், பஞ்சாப் மாநிலத்தில் அமிரீந்தர் சிங் தன விவசாயிகளை போராடத் தூண்டி விடுகிறார். அதேபோல ஹரியானாவில் காங்கிரஸ் தலைவர்கள் விவசாயிகளை தூண்டிவிடுகிறார்கள். என்னை பதவி விலக சொல்ல அவர் யார்? டெல்லியில் விவசாயிகள் போராட தூண்டிவிடும் அமிரீந்தர் சிங் தான் பதவியை ராஜினாமா செய்ய வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.

Categories

Tech |