பிரபல இந்தி நடிகை ஊர்வசி ரவுத்தலா அண்மையில் இயக்குனர் ஜேடி-ஜெர்ரி இயக்கத்தில் லெஜண்ட் சரவணன் நடித்துள்ள “தி லெஜண்ட்” திரைப்படத்தின் வாயிலாக தமிழ் திரையுலகிற்கு அறிமுகமானார். இவருக்கும் இந்திய கிரிகெட்வீரர் ரிஷப் பண்டுக்கும் காதல் மலர்ந்து இருப்பதாக கிசுகிசுக்கள் வந்தது. இதையடுத்து சமீபத்தில் ஊர்வசி ரவுத்தலா அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது “ரிஷப் பண்ட் தன்னை பார்க்கவந்து பலமணி நேரம் காத்திருந்ததாகவும், நான் சோர்வாக இருந்ததால் அவரை சந்திக்கவில்லை எனவும் மறைமுகமாக பேசி இருந்தார்.
இதன் காரணமாக அதிர்ச்சியடைந்த ரிஷப் பண்ட் ரசிகர்கள் ஊர்வசி ரவுத்தலாவை கடுமையாக விமர்சித்தனர். ரிஷப் பண்டும் ஆத்திரமடைந்து தன் சமூகவலைதளப் பக்கத்தில் ”வெற்று விளம்பரத்திற்காக சிலர் பொய் பேசுகின்றனர். அவர்களை கடவுள் ஆசீர்வதிக்கட்டும்” என ஊர்வசி ரவுத்தலாவை கண்டித்து பதிவு வெளியிட்டு பின் அதை நீக்கினார். இந்நிலையில் நிகழ்ச்சி ஒன்றில் ரிஷப் பண்டுடனான சர்ச்சை தொடர்பாக ஊர்வசி ரவுத்தலாவிடம் தொகுப்பாளர் கேள்வி எழுப்பினார். அப்போது அவர் கூறியதாவது ”நான் சொல்ல விரும்புவது ஒன்றுதான், என்னை மன்னிக்கவும்” என அவர் கூறினார். அவ்வாறு ஊர்வசி மன்னிப்புகேட்டதால் இருவருக்குமான மோதல் முடிவுக்கு வந்துள்ளதாக கூறப்படுகிறது.