உத்திரப்பிரதேச மாநிலத்தில் வரும் 11ஆம் தேதி சட்டமன்ற தேர்தல் 7 கட்டங்களாக நடைபெற உள்ளது. தேர்தலை முன்னிட்டு தலைவர்கள் பலர் சூறாவளிப் பிரச்சாரம் மேற்கொண்டு வருகின்றனர். அந்த வரிசையில் பிரதமர் மோடி பிரச்சாரம் செய்வதற்காக தனி விமானம் மூலம் உத்திரபிரதேசம் வருவதாக அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் மோடியின் விமான பயணம் திடீரென ரத்து செய்யப்பட்டது.
இது குறித்து மோடி கூறுகையில், “மோசமான வானிலை காரணமாக தேர்தல் பரப்புரைக்கு நேரில் வர முடியவில்லை. எனவே, நான் மக்களிடத்தில் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன்.” என கூறியிருந்தார். இதற்கு பதிலடி கொடுத்துள்ள உத்தர பிரதேசத்தின் முன்னாள் முதல்வர் அகிலேஷ் யாதவ் “பாஜகவின் போலி விமானம் உத்தரப்பிரதேசத்தின் எந்த இடத்திலும் தரை இறங்க முடியாது.!” என கூறியுள்ளார்.